உச்சம் தொடுவோம்
-----------------------
அநியாயங்கள் உச்சம் தொட்டு
அச்சுறுத்திக் கொண்டிருக்க
நியாயங்கள் சோர்ந்து போய்
நீட்டிப் படுத்துவிட்ட நிலை.
விலைவாசி உச்சம் தொட்டு
வியர்வையை உறிஞ்சி விடுகிறது.
வேலை செய்த மனங்களிலே
வேதனையை விதைக்கிறது.
தீவிரவாதம் உச்சம் தொட்டு
திகைக்க வைக்கிறது.
பாவிகளின் நடமாட்டம்
பல்கிப் பெருகுகிறது.
எண்ணை விலை உச்சத்தில்
எட்டமுடியாமல் இருந்து கொண்டு
அனைத்திற்கும் காரணமாய்
அலற வைக்கிறது.
இன்னல்கள் இதுபோல
எத்தனை வந்தாலும்
மனிதநேயத்தில் உச்சம் தொட்டு
மாற்றத்தைக் கொண்டு வருவோம்.
-சித. அருணாசலம்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-06-09