புதிதாய்ப் பிறப்போம்...
------------------------------
வாழ்க்கையின் அடுத்த படியில்
வழுக்காமல் செல்வதற்கு,
செறிவாய் நம்மை
செதுக்கிக் கொள்வதற்கு
எண்ணங்களை உளியாக்கி
உள்ளங்களைக் கையாளும் நேரமிது.
பிறர் காணமுடியாமல்
மூடி வைத்திருக்கும் முகத்திற்குள்
வேறுபாட்டைக் களைவோம்.
முகத்திற்குப் போடுகின்ற ஒப்பனையை
முக்காடிட்ட உள்ளத்திற்கு
முழுவதுமாய்ப் போடுவோம்.
நாக்கைத் திருப்திப்படுத்த
உயிர்களை வதைக்கின்ற
போக்கை மாற்றிக் கொள்வோம்.
வழக்கத்தில் அரிதாகிப் போன
வாக்குச் சுத்தத்திற்க்கு
வழி வகுத்துக் கொடுப்போம்.
வேறுபாடு தழைத்தோங்க
வேரூன்றிய வேண்டாதவற்றை
மாறுபாடு காணாதொழிப்போம் - இங்கே
கூறுபோட்டு மனிதர்களைக்
சோறுதேடும் கூட்டமாக்கியோரைச்
சொல்லால் சுட்டொழிப்போம்.
சமுதாயச் அவலங்களைச்
சந்தி சிரிக்க வைப்பதற்கு
பாரதியார், பாவேந்தர்,
பண்பாளர் பட்டுக்கோட்டை போல்
புத்தியில் ஏற்றி வைப்போம் - இதற்காய்
புதிதாய்ப் பிறந்து பார்ப்போம்.
-சித. அருணாசலம்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-01-14