ஈழத்தில் இழிவு நிலை
-------------------
புலிகளை ஒழிப்பதாய்ச் சொல்லிப்
பசுக்களை அல்லவா
பாடாய்ப் படுத்துகிறார்கள்.
நாடு கடத்துவதற்கு ஈடாக
நகரம் கடத்துகின்ற
நாகரீகமற்ற செயல் நடைமுறையில்.
காட்டு தர்பாரின் உச்சத்தைக்
காட்டுகின்ற நடவடிக்கைகள்
வெறித்தனத்தை வெளிச்சமாக்குகிறது.
காலம் செல்லச் செல்லக்
காலனைக் கூடக்
கைகூப்பி வரவேற்கக்
காத்திருக்கிறான் ஈழத்தமிழன்.
- சித. அருணாசலம்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-11-02