மனிதர்கள் பலவிதம்
------------------------
நிலை தாழ்ந்து
சோம்பலைச் சுமந்து
காலத்தின் மீது
பழி சுமத்துபவன்
முன்னேற்றத்திற்குத் தானே
முட்டுக்கட்டையாய் இருப்பான்.
சாதாரண மனிதன்
கனிந்து போய் விழும்
பழத்திற்குப்
பார்த்திருப்பது போல்
சாதகமாய் வரும்
சந்தர்ப்பத்திற்காய்
காத்திருப்பான்.
இலக்கை நிர்ணயித்து,
லட்சியத்தை மனதிலும்,
முயற்சியை செயலிலும்
முடிவாக்கிய மனிதன்
சந்தர்ப்பங்களை உருவாக்கி
சாதித்துக் காட்டுவான்.
- சித. அருணாசலம்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-09-14