கலப்படத்தின் உச்சகட்டம்
-----------------------------
மாறுவேடப் போட்டி வைத்தால்
முதல்பரிசு நிச்சயம்,
மிளகு வேடம் பூண்ட
பப்பாளி விதைக்கு.
அகலிகையைப் போல்
சாபவிமோசனம் பெற்று
அரிசிகளாய்க் கற்களின் அவதாரம்.
சிவப்பாக இருப்பதாலே
செங்கல் தூளுக்கு
‘மிளகாய்ப்பொடி’ உயர்பதவி - இப்படி
ஒன்று வாங்கினால்
ஒன்று இலவசமென
உடல் உபாதைகளுக்கு
உடன் வழிவகுக்கலாமா?
இரசாயணக் குவியலால்
இமயமான நோய்களுடன்
இன்னமும் சேர்க்கலாமா?
-சித. அருணாசலம்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-26