உவமானமில்லாத உவமேயம்
என் அலர் அகவைகளில் ஒரு நாள்
அந்த இங்லிஷ்படம் என்னைக் கிளர்த்தும்வரை
எனக்கு முத்தங்கள் பற்றியோ அதன்
வகைகள் பற்றியோ சத்தியமாய் ஒன்றுந்தெரியாது
இங்கிலிஷ் பெண்களுக்கு எங்கேபோவது
ஆனாலும் முத்தம் தரக்கூடிய
அனைத்துப் பெண்களிடமும்
தவறாது பெற்றுக்கொண்டேன்
ஒவ்வொரிவரிடத்தும்
வார்த்தை வயப்படுத்தமுடியாத
ஒவ்வொரு சுவை
தேனென்றும் கள்ளென்றும் கனியென்றும்
சொல்லப்பட்டிருக்குத்தான்
ஆனாலும் அது
உவமானம் இல்லாத உவமேயம்
அந்த மூன்று நாட்களிலும்
ஆரோக்கியக் குறைவானவேளையிலும்
(சம பாலாரிடமும்)
இதழ்கள் அவ்வளவாய்ச் சுவைப்பதில்லை
நான் முதலிரவில் ஸ்ராராமனாய்
அவளை அணைத்து
முத்தம் தந்தானதும் கேட்டாள்:
"பிரண்டையைக் கடிச்சமாதிரி
என்னாங்க இது?
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-04-03