சுமை
வாழ்க்கை
அப்படியொன்றும்
சுமக்க முடியாததென்றில்லை
அடியும் கண்டலும்
ரணமும் வலியும்
இருக்குந்தான்,
ஆனாலும் சுமக்கலாம்.
அதுதான்
சுமக்கிறோமே?
ஆயுள்.
அடியில் ரணத்தில்
அலைச்சலில் ஆதரவில்
தவிப்பில் தாகத்தில்
காமத்தில் போகத்தில்
வம்பில் வாழ்த்தில்
பழியில் பந்தாவில்
சராசரி மனுஷன் ஆயுளில்
மூன்றில் இரண்டைக் கரைத்தாயிற்று
உள்ள சொச்சத்தையாவது
பயனாக்க வேணுமென்றால்
கொஞ்சம் வாசிப்பதையும்
எழுதிக் குழப்புவதையும் தவிர
வேறு என்னதான்
செய்வதென்றுதெரியவில்லை.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-03-27