காலம்.
- காருண்யன் -
என் கொள்ளுத்தாத்தா
கொள்ளுப்பாட்டிக்கு விளாசிய சவுக்கை
என் பாட்டி கண்டிருந்தாள்
தாத்தாவும் சிறு களியையோ
தன் இடுப்பு பெல்ட்டையோ
பாவித்திருக்கக்கூடும்!
அப்பா பாவம்...............வெகு அப்பாவி
ஆதிக்கம் அடக்குமுறைகள் அறியாது
அமைதியாய் வாழ்ந்தவள் அம்மா
என் மனைவி விவாதிக்கத்தெரிந்தவள்
அவள் தர்க்க நியாயப்பொறிகளிலே
என் கசடுகள் தாமே பொசுங்கும்
என்மகள் நாளை என் செய்வாள்
என்றெல்லாம் அனுமானிக்க முடியாது
ஆனால் யார் கண்டது?
அவள் என் பெயர்த்தி
சொடுக்கும் சவுக்கைக் காணநேரலாம்!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-01-09