மகாத்மா..
----------------
சட்டையைக் கழட்டிவிட்டு
சகாப்தத்தை மாட்டிக் கொண்டவன்.
அகிம்சையைக் கையிலெடுத்து - மற்ற
ஆயுதங்களின் கூர்மையைக்
கேள்விக்குறியாக்கியவன் - உன்
கைகளின் பார்வைக்குப்
கால்கள் பல பதிலாயின.
கண்களின் ஒளியிலோ
கடமைகள் தான் தெரிந்தன.
சட்டம் என்கிற சாக்கடையினால்,
திட்டமிட்ட குற்றவாளியாகி
நீதிமன்றம் வந்தபோது,
ஒட்டுமொத்த மன்றத்தையே எழவைத்த,
மாண்பினை மகத்துவமாய்ப் பெற்றவன்.
நோபல் பரிசு உன்கைகளில் தவழும்
நிறைவினை அடையவில்லை - இன்றோ
நிகழ்வாய், மிக நெகிழ்வாய்,
வன்முறைக் கெதிரான
உலக தினமாக
உன் பிறந்த நாள்
உருமாறிய போது - உன்
மனதுக்குள் இருந்து சிறந்த
மகத்துவம் இன்னும் வெளிச்சமாகிறது
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-11-02