பனை
அன்று ஊருணி
இன்று
தலையில் நீர்தாங்கிய
தண்ணீர்த் தொட்டிகள்.
கசிந்த நீர்ப்பரவலில்
பெயர் தெரியாத் தாவரங்கள்
ஆனால்
எட்ட உள்ள பனை
ஒற்றைக் கால் வற்றி
வெக்கையில் தவிக்கும்
அன்றும்.... இன்றும்....
--சிதம்பரம் நித்யபாரதி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-11-04