இறகு
விரைந்திடும் பறவையின்
பின்கால் விடுத்துப்
பிரிந்து... மிதந்து...
விழுந்தது.
கருப்பு இறகென
என் மனம் கொத்துமுன்
பாலிதீன் என்பது உறைக்கும்.
எதுவென நினைத்து
அது கொத்தியதோ?
என்னவாய் எண்ணிக்
கீழ் உதிர்த்ததுவோ?
---சிதம்பரம் நித்யபாரதி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-02