நாளைய வலி
'எழுத்து வலிமையானது தெரியுமா?'
-பெருமிதக் கேள்வி!
வலிக்கும் எனத் தெரியும் என்றாள்.
நெருக்கி நெகிழ்ந்து
காலம் - காமம் மறுத்து
விரல்கள் சேர
வலிகளின் தழும்புகளைத் தேடினாள்.
நாளைய கவிதை என்றான்
இல்லை நாளைய வலி என்றாள்.
-- சிதம்பரம் நித்யபாரதி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-02-03