பெயர் எதற்கு?
காலையில் முன்முற்றத்து உலாவில்
செவிப்பட்டது
'கீக் கீக் கீக்'
பார்வை பட்டதால்
உருவம் ஒளிப்பது போல்
விரைந்தேகினும் தேயாத
'கீக் கீக் கீக்'
கணம் இனித்த அமரநிலை
அடி நாக்குச் சுவையாக...
'கீக் கீக் கீக்'
பெயர் எதற்கு?
- சிதம்பரம் நித்யபாரதி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-10-21