எப்படி?
கான்வென்ட் படிப்பின்
கனத்தில் அழுந்தி
நெருக்கடி பஸ்சில் திரும்பிய
பத்து வயது மகளின் முகத்தில்
என்னைப் பார்த்துப்
பூக்குது சிரிப்பு எப்படி?
இரண்டு மழலையில்
பாதி இளமையும்
உப்பு புளி கணக்கில்
மீதி இளமையும்
முழுதாய் தொலைத்த
மனைவிக்குக் கூட
என்னைப் பார்த்து
முகிழ்க்குது சிரிப்பு எப்படி?
---சிதம்பரம் நித்யபாரதி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-10-13