வீடு.
கூடி நாங்கள் வாழும் வீடு
மாடி வீடு எங்கள் வீடு
ஆடி ஓடி ஏறும் வீடு
நான்கு மாடி வீடு இது.
அப்பா அம்மா தங்கையுடன்
அழகாய் கூடும் வீடு இது
அன்பு பாசம் கூட்டி வைத்து
ஆசை பெருக்கும் வீடு இது.
வாடகை வீடு - நான் வசிப்பது
வளமாய் நன்கு நான் படித்து
வசதி பெருக்கிப் பணம் சேர்த்து
வாங்குவேன் ஒரு புது வீடு!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-04-10