அனுபவம்
மொட்டைப்பாறைக்குக்கீழ்
சுழித்தோடும் தாமிரபரணி.
தாவித்துளையத்
துறுதுறுக்கிறது மனம்.
"இங்கேதானே இழுப்பில்
தவங்கினாய்? - பட்டறிவு போதகம்
கர்ப்பிணி மனைவி,
கட்டாமல் விட்ட ஆயுள் காப்பீட்டு சந்தா...
................................
என்றேனும் ஒருநாள்
என் அசட்டுத் தைரியம்
ஜெயிக்கும்..
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-04-30