Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

ஆராதனைத் தாமரை.

- வேதா. இலங்காதிலகம்

ஆராதனைத் தாமரை.
-----------------------------------

தாரணி மலர்களில் தாரகை.
தண்ணெனும்; அழகு, செழுமை.
தகுதியாம் அடக்கம், புனிதமுடை
தாமரை மலர் தெய்வீகம்.
தடாகச் சேற்றில் மலரும்.
தண்ணீர்; உயரத் தானுயரும்.
தற்காலம், ஆதி காலமாய்
தரையிற் புகழுடை தாமரை.
ஐந்தாயிரம் ஆண்டுப் பழையது.
ஐங்கணை என்றும் பெயராம்.
செந்தாமரை பெயர் கமலா.
இளஞ்சிவப்பு மலர் பத்மா.
நீலத் தாமரை நீலோற்பலம்.
வெண்மைத் தாமரை புண்டரீகா.
வெய்யோன் கண்டு மலர்ந்து
வெய்யில் மறைய வாடும்
ஆத்மிக வாழ்விலும் உயரிடம்.
இதயம் ஒப்புவமை தாமரைக்கு.
இலைத்தண்டு விளக்கின் திரி.
இலையோ உணவுத் தட்டு.
இசைந்த உணவு கிழங்கு வேர்.
இழைத்தனர் ஆடை நாரிலும்.
கடவுளர் அமர்ந்த கமலாசனா.
கடவுளர் கரங்களில் ஏந்தினர்.

புத்தன் காலடியில் மலர்ந்தது.
புராணக் கதைகளில் இணைந்தது.
புத்தம், இந்து சமய அடையாளம்,
பூவின் அடிப்பாகம் பரிசுத்தம்.
பிரிய உணவு யானைக்கு.
பாரசீகக் கலைகளில் பாவனை.
சரித்திரம், இலக்கியம், சமயங்கள்,
சிற்பக்கலை கையாண்ட தாமரை.

வேதா. இலங்காதிலகம்

-அலைகள்.கொம் -

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-02-10


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • நல்வதோர் வீணையாம், நந்தவனப் பூவாம்..
  • வீடு
  • இன்னுமெந்தன் காதில்..
  • பெண் மொழிகள்
  • வதந்தி
  • மனித நேயக் கிரீடம் அணியுங்கள்
  • மன்னராலும் கரையிடமுடியாத
  • எனக்குள்ளும்..
  • இதயத்தில் கொலு
  • ஒளி
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube