Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

காதல்

- தென்றல்.இரா.சம்பத்

காதல்


என் உள்ளத்தை
களவாடிய கள்வனே.......
உன் கருவிழியிரண்டால்
இந்த கன்னியை
ஏரெடுத்துபார்த்து போய்விடுகிறாய்!
ஏன் பேசாமல்போனாய்
என என்னையே
என் மனம்
எத்துனைமுறைதான் கேட்டுக்கொள்ளும்!

உனைப்பார்த்த
நாள்முதலாய்-நான்
என்னையுமறியாமல்
குழம்புக்கு சீனியையும்
பாலுக்கு உப்பையும்
சேர்த்து கொண்டிருக்கிறேன்

உனை பாராதபோது
உன்னையே நினைந்து
ஏதேதோ பேசி
பூரித்துப்போகும் நான்
உன் கருவிழி கண்டதும்
நாணத்தொடு நழுவி விடுகிறேன்
உன் பார்வையிலிருந்து
எதுவுமே பேசாமலேயே......

அப்படி என்ன செய்தாயடா?
எத்தனையோ ஆடவரோடு
பேசும்போதும்
பார்க்கும்போதெல்லாம்
வாராத உணர்வுகள்
உனைப்பாராமல்
பார்த்து போகும்போதுமட்டும்
என் உள்ளத்தைச்
சூழ்ந்து சந்தோசம் பேசுகிறது.

வெட்கத்தை மறந்து
வெட்கத்தை மறைத்து
என் உள்ளம் சொல்ல
உன்னிடத்தில்
ஓடிவரும்போதெல்லாம்
வெட்கத்தை மறப்பதை
மறந்து தலைகுனிகிறேன்.

என்னிடம் பேசுகிறாய்
எப்போதாவது!
எதைப்பற்றியாவது!
எனைப்பற்றியில்லாமல்.
அதில்கூட
ஆனந்தப்படுகிறேன் நான்.
எப்படியோ
உன்னிடம் பேசிவிட்டதால்.

கள்வனே.......
கவி எழுதும்
உன் கைவிரலிரண்டையும்
எப்போது எனதாக்குவாய்.
எனக்கென
ஓர் கவிதை எழுத
எப்போதாவது
மனம்வந்தால்- உடனே
சொல்லிவிடு
என் இதயத்தில் எழுத
இடம் தருகிறேன்.

நான் நிலம் பார்த்து
நடக்கையிலெல்லாம்
நிமிர்ந்து பார்க்கவைக்கும்
உன்குரலை
எப்போது எனதாக்குவாய்!

மன்னவனே........!
என் கனவுகளில்
கலையாமல் வந்துபோகும்
கண்ணாளனே!
உன் பார்வை அம்புகளால்
என் உள்ளத்தை
பதம்பார்த்தது போதும்
பேசு!
எதையாவது அல்ல!
எனைப்பற்றி!!

பேசச்சொல்
உன் ஜீவனை பேசச்சொல்!
பேச வை
என் ஜீவனை பேச வை!
புரியவைக்கிறேன்
எதற்காக நான் வாழ்கிறேன்!
யாருக்காக நான் ஏங்குகிறேன்!
என்பதனை.

உனக்காகத்தான் என்பதை
இங்கே ஓசையில்லாமல்
சொல்கிறேன் கேள்!
உன் காதுமடல் கொண்டல்ல
உன் கருவிழி கொண்டு!

பேசத்தெரிந்த
உன் கருவிழிக்கு
கேட்கத் தெரியாமலா போகும்!
அதனால்தான் கேள்!
உன் கருவிழிகொண்டு கேள்.....

என்னவனே
நான் உனை காதலிக்கிறேன்..

நீயும்தானே............?


தென்றல்.இரா.சம்பத்
ஈரோடு-2
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-01-27


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • வலி
  • சாக்கடை....
  • பிரிவு...ஏ(மாற்றம்)
  • பிரிவு உபச்சார விழாவில் ...
  • நிம்மதி
  • இரா.சம்பத் கவிதைகள் 02-12-07
  • இடைவெளி
  • காதல் வரலாறு
  • ஆட்டோகிராப்(நினைவோலை)
  • சுமை
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube