1. காதல் வரலாறு
-----------------
உலகின்
எந்தக் காதலிலும்
கர்வப்பட ஏதுமில்லை...
ஆண் பெண்ணை ஏமாற்றுவது..
பெண் ஆணை அலையவிடுவது..
அதனால்
அவளோ,அவனோ
உயிரைவிடுவது
இதுதானே வரலாறு...
கடந்த காலத்தின் காதல்
தோல்வியில் துவண்டிருக்கலாம்
அல்லது
கண்ணீரால் கரைந்திருக்கலாம்
இதுதானே வரலாறு...
இப்போது
இருபாலுக்கும்
காதலின் நாகரீகம்
கனிசமாய் மாறியிருக்கிறது
காமம் ஒரு
கவர்ச்சிப் பொருளாய்
புகுந்திருக்கிறது..
காதலைச்சொன்ன
கருவிழிக்குள் இப்போது
காமமும்
கலந்து கிடக்கிறது
கடந்த காலத்தில்
இதயத்தில் சுமந்து
அழுதவருண்டு..
இப்போது வயிற்றில் சுமந்து
அழிப்பவரே உண்டு !
அழுபவரும் உண்டு !
காதலின் நாகரீகம்
புதியதாய் இருக்கலாம்
ஆனால் வரலாறு ஒன்றுதான்...
- தென்றல்.இரா.சம்பத் ஈரோடு-2
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-22