பிரிவு...
~~~~~
1.
சகியே..
இயல்பாய் இருக்கப்
பழகிக்கொள்கிறேன்
நீ இல்லாத தருணங்களில்...
ஆதுவரை
உன் நினைவுகளையாவது
விட்டுச்செல் என்னிடமே.....
2.
ஆடிக்கள்ளி...
நீ வந்தபோது
தெரியாமல் போனது...
போகும்போது
என் உயிரையும்
எடுத்துச்செல்வாயென்று...
ஏ(மாற்றம்)
~~~~~
1.
சகியே....
வழக்கமாய் நீ வரும்
காலம் கடந்துவிட்டது
கடிகாரமுள்ளும்
பந்தையக்குதிரையாய்
நிமிடங்களைக் கடக்கிறது....
நீ வருவாயா... மாட்டாயா..?
இதையே
திரும்ப திரும்ப எத்துனைமுறைதான்
என்னிடமே கேட்டுக்கொள்வேன்
இனி வரமாட்டேன்
எனச்சொன்னாலும் பரவாயில்லை...
ஆதையாவது - வந்து
சொல்லிவிட்டுப்போ......
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-11-12