குட்டி கல்வாழை
தோட்ட மூலையில்
குட்டி கல்வாழை
இலை கிழிந்து வருந்தும்
பக்கத்தில்
சருகான வாழையைக் கண்டு கலங்கும்.
காற்றின்
அலைக்கழிப்பு-
காலன் நான் எனக்
காதில் கிசுகிசுப்பு.
தோட்டத்தை விட்டோடி
வீட்டுக்குள் தாளிட்டுக் கொண்டேன்.
அப்படியும்
ஜன்னல் வழி காற்று மோதும்!
பிடுங்கிய சருகு வாழை-
கூடத்தில்
அமரர் பெட்டியில் இருப்பதாய்ப் பிரமை!
-- சிதம்பரம் நித்யபாரதி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-01-27