Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

தமிழ் படிப்போம்.. சுளரும்

- வேதா. இலங்காதிலகம்

தமிழ் படிப்போம்.. சுளரும் கலாச்சாரப் பலம்


01.
தமிழ் படிப்போம்.
--------------------------

வாருங்கள்! வாருங்கள்!
வண்ணத் தமிழ் படிப்போம்.
வசீகரத் தமிழ் படிப்போம்.
வளமான தமிழ் படிப்போம்.

ஆரியத்தின் மூலமொழி
திராவிடத்தின் தாய் மொழி.
உலக முதன் மொழியென்று
மொழிந்தார் பாவாணர்.

ஓளவை மொழி பயில்வோம்.
வள்ளுவர் மொழி படிப்போம்.
கள்ளமற்ற நல்வழியால்
வெள்ளை மனமாய் வாழ்வோம்.

வளர்ப்பது தமிழெனும் எண்ணத்தால்
வளமான தமிழ் பாய்ச்சுவோம்.
வாக்குத் திறமை கூட்டி
வசீகரத் தமிழாய்க் கொட்டுவோம்.




02.
சுளரும் கலாச்சாரப் பலம்
-----------------------------------------

மூர்த்தியான தேவியர் மூவர்
முகாந்தரமாகி, மும்மூன்றிரவுகள்
மூலசக்தியாகி, முகிழ்ந்திடும் நவராத்திரி.
முறுவலோடு அழைக்கும் சரசுவதி பூசை.

பாலவயதில் ஆனந்தித்துத் துள்ளி
பண்டிகை மனதோடு, கடலைக்கும்,
அவலுக்கும் காத்திருந்த கால
நவராத்திரி ஒரு சிறப்பானது.

கலைகள், பேச்சுப் போட்டியென
கடமையாய்ப் பங்கெடுத்த சிறுமியாய்
பட்டுப் பாவாடை, கொத்துப் பூச்சூடி
பட்டாம்பூச்சியாய் மகிழ்ந்தவொரு சரசுவதிபூசை.

கலைகளின் மகத்துவத்தில் ஊஞ்சலாடி
இளையோர் மனம் விழித்திட, புலம்
பெயர் நாட்டில் கலாச்சாரப்
பலம் தரும் நாட்கள் சரசுவதிபூசை.

சிறிதேனும் புனித நாட்களறிவை
சிந்திடும் தேன்தமிழில் பிள்ளைகள்
சிணுங்கிச்சிணுங்கிப் பெறும் காலம்
சிரமத்துடன் தமிழையூட்டும் பெரியோரார்வம்.

கலைவிழா நிகழ்வுகளை ஒலி
ஒளியாக்கி ஊடகங்களில் ஆடவிட்டுக்
கலாச்சாரப் பாதுகாவலரா யிங்கு
கடமை பேணும் ஊடகங்கள்.

சரசுவதிபூசை முற்றுர் பெற
கௌரி விரதம் ஆரம்பம்.பெண்களதை
கௌரவமாய் முடிக்க, தீபாவளி
கொண்டாட்டமாயச்; சுளரும்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-01-19


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • நல்வதோர் வீணையாம், நந்தவனப் பூவாம்..
  • வீடு
  • இன்னுமெந்தன் காதில்..
  • பெண் மொழிகள்
  • வதந்தி
  • மனித நேயக் கிரீடம் அணியுங்கள்
  • மன்னராலும் கரையிடமுடியாத
  • எனக்குள்ளும்..
  • இதயத்தில் கொலு
  • ஒளி
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube