மகாசக்தி
--------------
கார் முகில் வானில் நிலா வெள்ளி தீபம்.
காசினி வாழ்வில் காதல் பேரொளி தீபம்.
மனிதனை மாற்றும் மனிதனை அழிக்கும்
மனிதனைக் காக்கும் மகாசக்தி காதல்.
நீரில் உலாவும் மீனுக்கு நீர் சாசுவதம்.
பாரில் உலவும் மனிதனுக்குக் காதல் சாசுவதம்.
மானுட வாழ்வுக் கடலில் இயங்கும்
மாதுரியம் பொங்கும் இன்பக் காதலோடம்.
மென்மைப் பட்டாம் நுண்ணிழைக் காதல்
வெண்மை யழகு மலருக் கொப்பாகும்.
உண்மை, மரியாதை, மதிப்பில் வாழும்.
பொய், அவமரியாதை, அவமதிப்பில் அழிந்திடும்.
காதலின்றேல் உந்துசக்தி, சாதனைகள் குறையலாம்.
ஆதலால் வேதனைகள் அலைக்கழித்து ஆட்டலாம்.
இயல்பு நிலை இயக்கம் இசைகேடாகலாம்.
இந்திரியங்களும் இறுகு நிலையையடையலாம்.
ஆதாம் ஏவாளோடு இணையம்வரை புரளும்
அழியாத ஆதர்ச அற்புதக் காதல்
பழியின்றி பாசமாய் மனமன்றில் ஆடினால்
வழிகாட்டும் உயர்விற்கு வரமாயும் ஆகலாம்.
12-09-2009.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-09-22