என் வாழ்க்கை...
----------------------
மனதின் ரணங்கள்
நாட்கள் கடந்தாலும்
ஆறாது !
மனதின் ஏக்கம்
மாதங்கள் கடந்தாலும்
மாறாது !
மனதின் துக்கம்
வருடங்கள் கடந்தாலும்
தீராது !
என் மனதில் தங்கள் நினைவுகள்
ஜென்மங்கள் கடந்தாலும்
நீங்காது !
இனி ஏவறும் குடியிருக்க முடியாது
கிழிந்து விட்ட மனதில்
அதை தைப்பதற்கு
வேறு ஏவரையும் அனுமதிக்க
இயலாது !
நீங்கள் விட்டு சென்ற
நினைவுகளை
கவிதைகளாக்கி கொண்டேன் !
நீங்கள் விட்டு சென்ற
கவிதைகளை
நினைவுகளாக்கி கொண்டேன் !
இவை இரண்டையும்
நிரந்தரமற்ற
நிமிடங்களில்
ஜிவிக்கும்
என் வாழ்க்கை
ஆக்கிக்கொண்டேன் !
-அனாமிகா பிரித்திமா
anamikapritima@yahoo.com
http://anamikapritima.blogspot.com/
http://anamikapritima.weebly.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-06-30
சு.சிவா