ஏமாற்றம்...
வீட்டின் அழைப்புமணி அடித்தது...
மானாய் துள்ளி ஓடினேன்...
அது நீங்களாய் இருப்பீர்கள் என்று...
இம்முறையும் இல்லை...
ஏமாற்றம்...
தொலைபேசி மணி அழைத்தது...
மூச்சிரைக்க ஓடி எடுப்பேன்...
அந்த அழைப்பு தங்களின்...
சிம்மக் குரலை சுமந்து வரும் என்று...
இம்முறையும் இல்லை...
ஏமாற்றம்...
தபால் என்றவுடன்...
தலை தெறிக்க ஓடுகிறேன்...
தங்கள் முத்தான கடிதம்...
என் கையில் தவழும் என...
இம்முறையும் இல்லை...
ஏமாற்றம்...
இதை ஒவ்வொரு...
முறையும் செய்கிறேன்...
என்றாவது ஒரு நாள்...
என் ஏமாற்றத்திற்கு...
முற்றுப்புள்ளி...
வரும் என்று...
........?
-அனாமிகா பிரித்திமா
anamikapritima@yahoo.com
http://anamikapritima.blogspot.com/
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-03-24