வரன்... எது ?
01.
வரன்
----------
வாடிக்கையாய் நடக்கிறது வீட்டில்...
வரன் ஒன்று வந்திருக்கிறது...
விவரம் சொல்கிறேன் கேள்...
விஞ்ஞானி, பொறியாளர்,
வழக்கறிஞர், மருத்துவர்...
வடநாடு அல்லது அயல்நாடு...
நல்ல குணம், குடும்பம், படிப்பு...
என்ன சொல்கிறாய்...?
நேரம் கொடுங்கள்...
யோசிக்கிறேன்...
பின் மெளனம்...
மெளனம்...
மெளனம்...
சம்மதத்திற்கு அறிகுறி அல்ல...
பிடிக்கவில்லை என்பதற்கு...
காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறேன்...
இப்படியாய்...
எப்போது சம்மதிப்பேன்...
என காத்துக் கொண்டிருக்கிறார்கள்...
என்றும் இல்லை...
என்பது என் மனதிற்குத் தெரியும்...
ஏன்....?
என்று உங்களுக்கு...
புரியுமே...
02.
எது ?
----------
முக்குக்கண்ணாடி ...
வெளியே தெறிக்கும்...
அந்த காந்த கண்களா?...
அதன் மேலிருக்கும் ...
வளர்ந்தும்-வளராத...
அந்த புருவமா?
கோபம் பளிசிடும் நாசியா?
அதன் கிழ் இருக்கும்...
கற்றை மீசையா?
கவிதையை நேர்த்தியாய்...
படிக்கும் உதடுகளா?
அதன் உள் இருக்கும்...
சற்றே உடைந்த முன் பல்லா?
கவர்ந்திழுக்கும்...
அந்த அழகிய காதா?
சங்கிலி அலங்கரிக்கும்...
சங்கு கழுத்தா?
சற்றே வளைந்திறுக்கும்...
அந்த ஒற்றை விரல் நகமா?
பரந்து விரிந்த அந்த மார்பா?
முதுகில் இருக்கும்...
அந்த முடிமுளைத்த மச்சமா?
கேந்தி...
நடக்கும் அந்த காலா?
எது ஈர்த்து என்னை தங்களின்
நிரந்தர கைதி ஆக்கிவிட்டது?
...........எது?
-அனாமிகா பிரித்திமா anamikapritima@yahoo.com
http://anamikapritima.blogspot.com/
http://anamikapritima.weebly.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-18
அந்த அழகிய காதா?
சங்கிலி அலங்கரிக்கும்...
சங்கு கழுத்தா?
கவிதையை படித்துச்சுவைத்தேன்.
சங்குக்கழுத்து உவமை மகளிருக்கு உரியதோ என்றொரு எண்ணம். சரியா நான்?