1.ஒருவன்
மதம்?
மொழி?
ஜாதி?
கட்சி?
சங்கம்?
ம்...?
கமல்? ரஜினி?
லக்ஸ்? கோல்கேட்?
ஓல்டு மங்க்? கணேஷ் பீடி?
அட! எதுவுமில்லையா?
தனிப்பட்டவனா?
மன்னிக்கவும்
அப்படியிருக்க முடியாது
வேண்டுமானால்
இப்படி வைத்துக்கொள்வோம்
நீ தனிப்பட்டவர்களில் ஒருவன்!
2.செருப்பு
நீரும் சகதியுமாய்
சொத சொதவென..,
இரண்டடி முன்வைத்தால்
ஓரடி பின்னிழுக்கும்
மழைக் காலத்தில்
இந்த செருப்பு!
- சூர்யா கண்ணன்
குன்னூர்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-31