அம்மாவின் சேலை
எப்போதோ வாங்கின
அம்மாவின் சேலை
அக்காவுக்கு தாவணி
தம்பிக்கு சட்டையென
கிழித்து தைத்தது போக
மீதமிருந்தது
தலையணைக்கு உறையும்
போன மாதம் வயதுக்கு வந்த
தங்கைக்கு ஒரு முட்டுத்துணியும்
-சூர்யா கண்ணன்
குன்னூர்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-11-04