மழை அரசி
ஆடலி ஆடலி என்றேன்
கோபுரத்தில் ஒலித்த குரல்
திசைகளில் பெயர்ந்து காற்றாயிற்று.
வானத்தில் மிஞ்சிய கிளையில்
நடனமிடும் சிட்டைக் காணுந்தோறும்
கண்கள் பனிக்கிறது ,
நீ வருகிறாய் நினைவாய்.
ஆடலி என்றேன்
பூக்கள் மலர்ந்தன
நிறங்களாய் ஆனதிவ் வுலகம்
நெய்த கனவில்
நீ கரையும் ஓவியமாய் ...
ஆடலி ஆடலி என்றழைக்குமென் குரல்
தாகம் பெயர்க்கும் கோடையாயிற்றா ?
ஆடலி ஆடலி
நீ மழையல்லவா
நடனமிடும் மழையல்லவா
ஆயினுமே னிந்தக் கோடை இன்னும் ?
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-22