Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

புதிய காதற் பாடல்

- வெளிவாசல்பாலன்

புதிய காதற் பாடல்

உன்னுடைய இதயத்தில்
எதை நிரப்பி வைத்திருக்கிறாய்
என்று கேட்டாள் அவள்.

பூக்களும் வாசனையுமென்றான் அவன்
கனியும் சுவையும் வேண்டுமென்றாள் அவள்

உன்னுடைய கண்களில்
எதை நீ வைத்திருக்கிறாய் என்றாள் அவள்

உன் கண்களையும்
உன்னுடைய ஞாபகங்களையும் என்றான் அவன்

எதிர்காலத்தையும் வசந்தத்தையுமே
விரும்புகிறேன் என்றாள் அவள்

உன்னுடைய கைகளில்
எதைச் சேமித்திருக்கிறாய் என்று கேட்டாள் அவள்

உன்னையும் உன் அழகையும் என்றான் அவன்

காலத்தையும் பாதைகளையுமே
விரும்புகிறேன் என்றாள் அவள்

உன்னுடைய பயணம் எங்கே என்றாள் அவள்

உன்னிடம், உன் இதயத்திடம் என்றான் அவன்

வெளிகளிலும் பறவைகளிலும்
நானிருக்கிறேன் என்றாள் அவள்.

உன்னுடைய பாடல்கள் யாதாயுள்ளன என்று கேட்டாள் அவள்

உன்பெயராகவும் அதன் இசையாகவும் இருக்கின்றன
என்றான் அவன்

காற்றின் குரலையும்
காலத்தின் மொழியையும் விரும்புகின்றேன்
என்றாள் அவள்
மேலும்
அழும் குழந்தையையும்
கண்ணீரோடுள்ள தாயையும் ஆதரிக்கிறேன் என்றாள்

உன்னுடைய நிலப்பரப்பெது வென்றாள் அவள்

புல்வெளியும் மலர்த்தோட்டமும் என்றான் அவன்

நீரூறும் சுனையும்
அடர் மரங்களுமே தனது நிலப்பரப்பென்றாள் அவள்.

உனது கனவுகள் எங்கேயென்றாள் அவள்

புல்வெளியில்
பனித்துளி மீதிலே என்றான் அவன்.

ஆற்றினோரமும் விளையும் வயலும்
எனது இதயமென்றாள் அவள்

பூக்களை எடுத்துச் சென்ற அவனிடம்
அவள் கொடுத்தாள்
கை நிறையத்தானியங்கள்.

-- வெளிவாசல்பாலன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-15


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • சாதுர்யை
  • சாதுர்யை 2
  • மழை அரசி
  • அழகிய பறவை
  • அரசி
  • புன்னகையின் சாதுர்யை
  • சொல்லடி அரசி யாரென்று.. மழை அரசி
  • ஆடலி
  • மாயம்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube