திசைகளை அசைபோடுதல்
நிழல்களை
வெவ்வேறு பொழுதுகளில்
எதிரெதிர்த்திசைகளில் வீழ்த்தும்
கிழக்கும் மேற்கும்
திசைகளைத் தொலைக்கும்
உருமத்தின் சூரியன்
சுயநிழல் சுமக்கச் செய்யும்
தற்காலிகத்தின் கடிகாரத்தை
கிழக்கு மேற்கை
செங்கோணத்தின் திசையில் வெட்டிப்
பறக்கும் பறவைகள் - அதிகாலை
வடக்கின் கூடுகளிலிருந்து தெற்கிற்கு
பெரும்பொழுதுகளில் முகில்களீனும்
நிறமற்ற மழைத்துளிகள்
அரிதாரம் பூசிக்கொள்ளும்
தென்மேற்கையும் வடகிழக்கையும்
இரவும் தன் முதுகில்
பச்சை குத்தியிருக்கிறது
பகலின் திசைகளை - இருப்பினும்
திசைகள் எட்டல்ல இரண்டுதான்
-அ. விஜயபாரதி
அறை எண் - 53
முதுநிலை மாணவர் இல்லம்
வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
மதுரை – 625 104
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-11-18