Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

நினைவில் விரியும் கிளைகள்

- அ. விஜயபாரதி

நினைவில் விரியும் கிளைகள்

வேலிக்கருவை மர இலைகளும்
கருவேல மரப் பூக்களும்
கீரைப் பொரியலாய்
கொட்டாங்குச்சியில்
மணத்துக் கொண்டிருக்கும்
இளம்பிராயத்தில் எழுப்பிய
மணல் வீட்டுக்குள்

எப்போதாவது
கோயில் ஆலமரத்தில்
குடியேறும்
வழிதவறிய குரங்கிற்கு
மிளகாய்ப் பொடி தூவிய
வாழைப்பழத்தோடு
காசுக்கு வாங்கிய நாவல் பழங்களைத்
தின்றத் கொடுத்து
அதன் மலத்தில் நெளியும்
புழுக்களில் உணர்ந்தோம்
கீரிப்பூச்சிகளின் நச்சரிப்பை

வாகை மரங்களுக்குத்
தலைகால்
புரிவதில்லை போலும்
பூக்களையே
குஞ்சங்களாய் சூடியிருந்தவை
இலையுதிர்த்து விட்டு
காற்றின் நட்டுவத்திற்கு
ஜதி செய்து கொண்டிருக்கிறது
தலையில் சலங்கையணிந்தபடி

ஆண்டாண்டு காலமாய்
நிழற்கிளை விரித்து
இனிக்கும் பழங்களை உலுக்கிய
பாதையோரப் புளியமரத்தை
வெட்டிய பள்ளத்தில்
மழைநீர் தேங்கும்
கோடையில்
வெயில் வேரூன்றி
வெக்கை பரப்பி நிற்கும்

புங்கமரம்
பூத்துக் குலுங்கியதால்
உதிர்ந்த மொட்டுக்களை
ஆட்காட்டி விரலசைத்து
நட்சத்திரமெண்ணுவது போல
ஒன்றிலிருந்தே மீண்டும் மீண்டும்
தொடங்குகிறேன்
ஒரு பகல்கனாவில்
மல்லாந்து படுத்தபடி

நிழலில் மட்டும்
கசப்பை இறக்கி வைக்காத
வேப்பமரக் கிளைதனில்
நித்தம் நண்பகல் வந்தமரும்
இரு மைனாக்கள்
உடல் சிலிர்ந்து இறகு கோதி
ஒருவித லயத்தில் சப்தித்தவை
இன்றெந்தன் சாளரத்தில்
வாசம் பண்ணவில்லை
சாரல் கதவாயிருக்கிறது

அணிலின் நகங்களும்
காற்றின் விரல்களும்
கொய்து தரையிலிறைத்த
மஞ்சள் கொன்றைகளைப்
பார்க்கும் கணம்
எவளொருத்தியின் நினைவில்
விளக்கமாறு வரவில்லையோ
அவளுடன் நான்
தண்டவாளங்கள் சந்திக்கும்
மாயப்புள்ளியில்
தாயம் ஆடிக் கொண்டிருப்பேன்

அ. விஜயபாரதி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-03-31


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • திசைகளை அசைபோடுதல்
  • விஜயபாரதி கவிதைகள் 25-11-07
  • அதற்குப் பிறகு
  • எல்லோர்க்கும் பெய்யும் மழை
  • பால்ய வயதில் என் நண்பன்
  • எனக்குப் பிறகு.. வேரீர்ப்பு
  • அலைந்து திரியும் மரணம்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube