பூனைகள்
நினைப்பெல்லாம்
உயர்ந்து விட்டதாக
தலைகால் புரியதா
கடுவன் பூனைகள்
புதிதாய் வரும் பூனைகளை
எலியாய் நினைத்து
ஏப்பம் விடுகிறது
கடுவன் பூனைகள்
பக்கத்தில் வரும் போதெல்லாம்
உறுமிச்செல்கின்றன
பயமறியா பூனைகள்
பக்குவப்பட்டதாலே
கண்களை மூடிச்செல்கின்றன
திரும்பிப் பார்க்க
திராணியற்ற கடுவன் பூனை
பூனையை சுரண்டியே
பிரபஞ்சத்தில் மினுமினுக்கிறது
பூனைகளின் வளர்ச்சிக்கு
கடுவன் காரணமாம்
சந்திக்கும் இடங்களிலே
சல்லாபப் பேச்சுக்கள்
சப்தங்களாக தொடர்கின்றன
பூனைகளுக்கும் புரியும்
நித்திக்கப்பட்ட நிர்பந்தத்தாலே
சாதுவாக ஓடுகிறது
கவிதை: நீ “ தீ”
- நீதீ
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-11-17