பூ
பாடைக்கு வைத்தாலும்
பரமனுக்கு வைத்தாலும்
வாடத்தானே செய்யும் ...பூ!
சாலை
இந்த சாலைக்கு தெரியுமா ?
மேலே கடக்கிற வாகனம்
எந்த ஊருக்கென்று..?
நாணயம்
பூ விழுந்தால்
வெற்றி எனக்குத்தான்
சுண்டிக்கொண்டேயிருக்கிறேன்
பூ விழும் வரையில்
நாணயத்தை..
-சூர்யா கண்ணன்
குன்னூர்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-11-11