கவிஞர் கடவுள் அவர்களுக்கு..
அன்மையில் நான் தாங்கள் எழுதிய
"இயற்கை" என்ற
கவிதை தொகுப்பை வாசித்தேன்.
அருமை..மிகவும் அருமை..
ஒவ்வொரு கவிதையை
வாசிக்கும் போதும்
நான் கொஞ்சம் மாறித்தான் போனேன்.
♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
மழை பற்றிய தங்கள் கவிதையை
வாசித்தபோது
என் மனம் கூட கொஞ்சம்
ஈரமாகி போனது.
நதி பற்றிய உம் கவிதையை
படித்தபோது
உடனே செத்துவிட தோன்றியது.
என் சாம்பலாவது
நதியோடு சேர்ந்து
நடை பழகட்டும் என்று..
வான வில் பற்றிய கவிதை
என் வாலிபத்தை
கொஞ்சம் வலிக்கச் செய்தது.
இத்தனை நாள் வானவில்
ரசிக்காத
என் இளமையை நினைத்து..
தென்றல் பற்றிய
உம் கவிதையை வாசித்தபோது
இந்த உலகத்தையே
நான் கொஞ்சம் மறந்திருந்தேன்
என்பதுதான் உண்மை.
♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
சுருக்கமாக சொல்வதென்றால்
ஒரு வேளை
இந்த புத்தகத்தை
நான் எழுதியிருந்தால்
இதற்கு வைத்திருக்கும் தலைப்பு
கவிஞனாவது எப்படி?
எனக்கு பிறகு
வர இருக்கும்
வரகவிகளுக்கு
நான் முன்மொழிந்து,வழிமொழியும்
நூல் இது.
♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
கவிஞரே!இந்த புத்தகத்தை
தயவு செய்து
இன்னொரு பதிப்பு வெளியிடுங்கள்.
இல்லையேல்..
பல தமிழ் இலக்கியங்களை போல
இதுவும்
இளைய தலைமுறையை
தரிசிக்காமல் இறந்துவிடும்..
-இ.அருண்மொழிதேவன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-11-04