உழவர் மகன் 2
------------
பன்னிரெண்டாம் வகுப்பில்
இரண்டாவது முறையாக
தவறியவுடன்
"என்னுடன் திருப்பூருக்கு வந்துவிடு"
என்றார் பெரியப்பா
"நிலத்தை விற்று
வெளிநாட்டுக்கு அனுப்பலாம்"
என்றார் மாமா
"பக்கத்து நகரில்
பெட்டிக்கடை வைத்துக்கொள்"
என்றார் அப்பா
கடைசிவரை
யாருமே சொல்லவில்லை
விவசாயம் பார் என்று.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-02-03