Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

தீதும் நன்றும் பிறர்தர வாரா

- அருண்மொழி தேவன்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நண்பா!நீ நம்பித்தான் ஆகவேண்டும்.
சத்தியமாக‌
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
உடை கொண்டு உடம்பு மறைப்பதை
நாகரிகம் என்றவன்

இன்று

உடை விலக்கி உடம்பு காட்டி
நாகரிகம் என்னும்போது

நீ நம்பித்தான் ஆகவேண்டும்
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
எரிதழல் எடுத்து,விலங்கு விரட்டிய‌
மனிதனவன்

இன்று

எரிதழல் கொண்டு,மனிதம் கொன்று
விலங்காய் மாறும்போது

நீ நம்பித்தான் ஆகவேண்டும்
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
காணிநில‌ம்,க‌ண‌நேர‌ ஆகாயம்,
சின்ன‌ தீப்பெட்டி,
சுவாசிக்க‌
சுத்தமான‌காற்று,
சின்ன‌ சின்ன‌ பொட்ட‌ல‌ங்க‌ளில்
சிறை இருக்கும் குடிநீர்.

ப‌ஞ்ச‌பூத‌ங்களை
ப‌ண‌த்தின் மறுவ‌டிவ‌மாய் பார்க்கும்போது

நீ நம்பித்தான் ஆகவேண்டும்
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
மழை கொடுக்கும் மரங்களையிம்
பச்சை நிற உயிர்களையிம்
துண்டு துண்டாய்
வெட்டிய‌வ‌ன்

இன்று

பயிர் பச்சை செழிக்க வேண்டி
வான் நோக்கி
தவமிருப்பதை காணும்போது

நீ நம்பித்தான் ஆகவேண்டும்
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
நண்பா!நீ நம்பித்தான் ஆகவேண்டும்.
சத்தியமாக‌
தீதும் நன்றும் பிறர்தர வாரா.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-10-28


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • மேக‌ தூது
  • ஆடுவோமே பள்ளு பாடுவோமே!
  • கவிஞர் கடவுள் அவர்களுக்கு..
  • குழந்தை தொழிலாளி
  • யார் ம‌னித‌ன்?
  • சொல்ல 'மர'ந்த கவிதை
  • அர்த்தமுள்ள கர்வம்
  • உழவர் மகன்
  • உழவர் மகன் 2
  • கோடை விடுமுறை
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube