ஒத்துக்கொள்ளா உன் காதலோடு...
-ரா. சொர்ண குமார்.
இன்னும் இன்னும் இன்னும்
இதயம் வலிக்கிறது...
உன் பொய்யான வார்த்தைகள்
புண்ணாக்கிப் போனதால்,
இன்னும் இன்னும் இன்னும்
இதயம் வலிக்கிறது!
உள்ளத்தை உறங்கவிட்டு
உதடுகளை உயிர்பிப்பாய் !
நீ சொன்ன வார்த்தைகளில்
நீந்த முயன்று மூச்சிரைப்பேன்!
தெளிவாக குழப்புகிறாய்.
தெளியாமல் குழம்புகிறேன்.
உனக்கான என் காதலினை
நான் சொன்ன நாளன்று...
எனக்கான உன் காதலை,
உறவுகளின் மேடையிலே...
சுற்றத்தின் தூக்கினிலே...
கவலையின்றி கொன்றுவிட்டாய்!
இன்று...
ஒத்துக்கொள்ளா உன் காதலோடு
ஒத்துப்போய்விட்டாய் நீ !
உன்னால் செத்துப்போன காதலை
கட்டி அழுகின்றேன் நான்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-01-01