உதட்டு வரிகள்
நிலத்தை உழுதிருந்தால்
பூவை விதைக்கலாம்....
பூவை உழுதிருக்கிறானே
புத்திசாலி பிரம்மன்...
எதற்கு அதற்குள்
என்னைப் புதைக்கவா?
-ரா. சொர்ண குமார்,
சென்னை.
****
உதட்டு வரிகள்
கவிதைக்கு
எத்தனை வரிகள்
கட்டாயம் இரூக்க வேண்டும் ?
கேள்விக்கு
பதில் தெரியவில்லை...
எண்ணிக்கொள்ளவா
உன் உதட்டு வரிகளை ?
-ரா. சொர்ண குமார்,
சென்னை.
****
எது அழகு ?
'இந்த பூ அழகு'
-என்கிறாய்
பூவைக் காட்டி...
அந்த பூவும்
இதைதான் சொன்னது
உன்னை காட்டி...!
-ரா. சொர்ண குமார்,
சென்னை.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-12-05