Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

காதலித்துப் பார்!

- ரா. சொர்ண குமார்

காதலித்துப் பார் !
-ரா. சொர்ண குமார்.

காதலித்துப் பார்!
உடலுக்கு மட்டுமில்லை
உயிருக்கும் வலியுண்டு
என்று உணர வேண்டுமா?
காதலித்துப் பார்!

உறக்கமின்றி நீயென்றும்
தவிக்க வேண்டுமா?
உணவைக்கூட
உதாசினப் படுத்த வேண்டுமா?
காதலித்துப் பார்!

எண்ணங்கள் எப்போதும்
சிதற வேண்டுமா?
எடுக்கின்ற காரியங்கள்
மடிய வேண்டுமா?
காதலித்துப் பார்!

கண்ணீரை கருவாக்கி
உதிரத்தை மையாக்கி
கவியெழுத வேண்டுமா?
உனக்குள்ளே உருகிக்கொண்டே
உன் பெயரை மறந்து கொண்டே
எவளோ ஒருத்திக்குள்
உறைய வேண்டுமா?
காதலித்துப் பார்!

பொன்னான பொழுதெல்லாம்
வீணாகவும்...
புகைவிட்டு புகைவிட்டு
இதயம் புண்ணாகவும்...
காதலித்துப் பார்!

முகத்தின் மேல்
முட்காடு வளர்க்க வேண்டுமா?
குடித்து குடித்து
குடும்பத்தை மறக்க வேண்டுமா?
காதலித்துப் பார்!

கடவுள் மேல் நம்பிக்கை
இழக்க வேண்டுமா?
கலியுகமே கவலையென்று
தோன்ற வேண்டுமா?
காதலித்துப் பார்!

பழகிய பந்தமெல்லாம்
பகையாகும்!
நெருங்கிய சொந்தமெல்லம்
நெருப்பாகும்!
காதலித்துப் பார்!

மழை பெய்தால்,
'வானம் யாரை காதலித்தது ?
ஏன் அழுகிறது ?' -என்பாய்!
அலையடித்தால்,
யாரைத்தேடி கடல்
அலைகிறது என்பாய்!
காதலித்துப் பார்!

இன்பம் மட்டுமே
இதுவரை கண்டாயா ?
துன்பம் காண
துடிப்புடன் உள்ளாயா?
காதலித்துப் பார்!

தற்கொலை செய்ய ஆசையா ?
கைவிட்டு விடு !
காதலித்துப் பார்!
இரண்டும் ஒன்றுதான்!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-12-17


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • உதட்டு வரிகள்
  • என்று வரும் புத்தாண்டு?
  • ஒத்துக்கொள்ளா உன் காதலோடு...
  • உயிர்க் காரணி
  • விவரம் அறியா விஞ்ஞானிகள்!

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube