விடுதலை
--- மு. பழனியப்பன்
யாருக்காகவும்
பணிந்து போகத் தேவையில்லை
பதவிப்பிரியர்கள்
பதவியைப் பெரிதாக மதிக்கிறார்கள்
பதவி முடிந்த அடுத்தநாளில்
யாரும் என்னைக் கவனிக்கவில்லை என்று
தேம்பி அழுகிறார்கள்
பணப்பிரியர்கள்
பணத்தைப் பெரிதாக மதிக்கிறார்கள்
நாளைக்கே பணம் வற்றிப்போனால்
கையேந்தக் கூட ஆளில்லாமல் போகலாம்
சுயப்பிரியர்கள்
தன்னைப் பெரிதாக மதிக்கிறார்கள்
தன் காற்று மாற்றி வீசினால்
சுயம் காணாமல் போகலாம்
எது எப்படியானாலும்
பதவிக்காகவோ
பணத்திற்காகவோ
சுயத்திற்காகவோ
மற்றவர்கள் பணிந்து போகவேண்டும் என்று
எண்ணுவதில்தான் சிக்கல் இருக்கிறது.
யாருக்காகவும் எதற்காகவும்
பணிந்து போகாதவர்கள்
யாரையும் பணிந்துபோகக்
கட்டாயப் படுத்த மாட்டார்கள்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-09-16