Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

சந்திப்பு

- மு. பழனியப்பன்

சந்திப்பு
----------------

மனிதர்கள் சந்திக்க
மறுக்கிறார்கள்

வீட்டில்
எல்லோரும் சந்திப்பது
அபூர்வமாகி விட்டது,
அவரவர்க்கு பணி நேரம்
பகலிலும் இரவிலும் மாறி மாறி வருகிறது

அப்பாவிடம் நேரடியாக
பேச வெட்கப்பட்ட
மகனால்
தொலைபேசியில் அரைமணி நேரம்
கருத்து சொல்லமுடிகிறது,

மனைவி ஓர் ஊரில்
கணவன் மற்றொரு ஊரில்
குழந்தை உண்டு அவளுடன்
இனி வேண்டுமா சந்திப்பு


கடன் பெற்றவரை
அவரின் வீடு தேடிவந்தும்
சந்திக்க முடிவதில்லை,


அலுவலகத்தில்
உள் இணைப்புகள் வழியாகவே
காரியங்களை நிகழ்த்திக் கொள்ள முடிகிறது,

பொது இ,டங்களில்
சந்திப்புகள்
நாகரீகமற்ற முறையிலேயே
அரங்கேறுகின்றன,


சந்திப்புகள் நிகழ்வதே இல்லை
பெரும்பாலும்,

எதற்காகச் சந்திப்புகளற்ற
வாழ்க்கை

முகத்திற்கு முகம்
காண இயலாத வாழ்க்கை
எதைச் சந்திக்க
இவ்வளவு
விரைவாய் முன்னேறுகிறது


-மு.பழனியப்பன்
muppalam2003@yahoo.co.in
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-04-24


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • காற்று வற்றிய காரணம்
  • சாலை
  • மண்ணும் மரமும்
  • கைவினை
  • வலி
  • சொந்தங்களிடமான சொந்தம்
  • நகர்வு
  • கலவரப்படும் மனது
  • விடுதலை
  • ஏற்கனவே சொல்லப்பட்டவை
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube