ஏற்கனவே சொல்லப்பட்டவை
மு, பழனியப்பன்
இது இப்படித் தான்
இவன் இப்படித்தான்
இவையெல்லாம்
ஏற்கனவே சொல்லப்பட்டவை
புதிதாக ஒன்றும்
புறப்படப் போவதில்லை
பழைய செய்திகள்
பழைய தத்துவங்கள்
பழையன
புதிதாக ஒன்றும் உருவாவதில்லை
ஓடும் நீரில்
அருந்தும் போது மட்டும்
சுவை தெரிகிறது
அதனால் அது புதுமையுடையதாகிறது
நூலகப் புத்தகங்களைப்போல
பழைய வாசனை
புதிதாய் எதுவும் இல்லை
நமக்குத் தெரிந்து கொள்ளும் எல்லாம்
நமக்குப் புதிது
ஆனால் பழையது
வேண்டும்போதெல்லாம்
பழையதை புதுப்பித்துக் கொள்கிறோம்
அதுவே
பழமையின் புது வடிவம
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-10-19