Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

கலவரப்படும் மனது

- மு. பழனியப்பன்

கலவரப்படும் மனது
மு. பழனியப்பன்


மரணம்
சம்பவிக்கும் நேரத்தைத் தவிர
வேறு ஒன்றும் முன்னேற்பாடு
இல்லாதது
கடிதங்கள்
இதனைத் தெரிவிக்கின்றன
தாமதமாக
அழுகைகள்
விளம்பரப் படுத்துகின்றன
இதனை
சுமக்கின்ற
வண்டிகள்
அடையாளங்களாகின்றன
வருபவர்களுக்கு
இழப்பின் வலி
மரணத்தின் அடுத்த நிமிடத்தில்
மறந்து போகிறது
ஏற்பாடுகளுக்கு
பணத்தை எண்ணிப் பார்க்கிறது
சுற்றம்
நாள் போனால் நாற்றம் வீசும்
பக்கத்து வீட்டுக்காரர்களின்
மனிதாபிமானம்
அமெரிக்க பாசம்
வரும் வரை காத்திருக்கிறது கூட்டம்
எதுவும் இல்லாமல் போகப் போகிறது
வாழ்க்கை
கழுவி விட்டார்கள்
வீட்டையும் மரணத்தையும் சேர்த்து
அடுத்த மரணத்தின்போது
கலவரப்படும் மனது
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-08-10


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • காற்று வற்றிய காரணம்
  • சாலை
  • மண்ணும் மரமும்
  • கைவினை
  • சந்திப்பு
  • வலி
  • சொந்தங்களிடமான சொந்தம்
  • நகர்வு
  • விடுதலை
  • ஏற்கனவே சொல்லப்பட்டவை
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube