நகர்வு
மு. பழனியப்பன்
இடம் விட்டு நகர்வதாய் முடிவாகிவிட்டது
எல்லாம் உறுதி
எவர் வந்தும் எங்களைத் தடுத்துவிட முடியாது
மகிழ்வோடு நாங்கள் கிளம்புகிறோம்
வரும்போது பெரிதாய் எண்ணி
வந்தோம்
போகும்போது பெரிதாய் எண்ணி வந்திருக்கத் தேவையில்லை
என்று தோன்றுகிறது
வாழ்க்கையின் ஒரு காட்சி இது
இது நிறைவுக் காட்சியுமல்ல தொடக்கக் காட்சியுமல்ல
இடைவேளைக் காட்சி
அவ்வளவுதான்
வந்தோம்
ஆனால் செய்ததெல்லாம் நன்மை
அது மட்டும் உறுதி
இதனால்
இருப்பவர்களைக் குறை கூற முடியாது
அவர்களின் இருப்பின்படி
இருக்க வேண்டிய கட்டாயம்
சரி
நாங்கள் கிளம்பிவிட்டோம்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-06-05