கைவினை
மு. பழனியப்பன்
குடைகளின் திருவிழா
நூலாலும் தாளாலும்
பற்பல வண்ணங்களில்
வாழை மட்டையில்
செருகி வலம் வரும் தெருவிழா
கடைகளில் எல்லாம்
நிச்சயம் இடம் பிடிக்கும்
5 ரூபாய், 10 ரூபாய்
கூவி விற்கும் சிறுவர்கள்
பிள்ளையார் பின்னால் வைத்தபின்
அலங்காரம் நிறைவெய்தும்
வீதிக்கு வீதி
கைவினைக் கலைஞர்கள்
எவர் பதிய வைக்கப்போகிறார்
இவர்களின் கலையாற்றலை
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-04-24