Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

மண்ணும் மரமும்

- மு. பழனியப்பன்

மண்ணும் மரமும்

-- மு, பழனியப்பன்

பழைய மாளிகை
ஏலத்திற்கு வந்தது

பத்து பன்னிரண்டு
சுத்தத் தேக்குத் தூண்கள்

நான்கு மிகப் பெரிய கதவுகள்

எதற்கும்
எந்தக் குறைபாடும் வராமல்
லாரியில் ஏற்றப்பட்டன.

உடைந்த மாளிகை
இடிந்த செங்கற்கள் உதிர்ந்த காரைகள்

ஒரே ஒரு தூண்மட்டும்
உளுத்துப்போய்

ஏலம் எடுத்தவன்
அதனை எதற்கும் ஆகாது
என்று விட்டுவிட்டான்

உளுத்த மரத்திற்கு
இப்போது உற்சாகம்

நான்தான் இந்த மாளிகையைத் தாங்கி வந்தேன்
ஏதோ போதாத காலம்
ஏலம் விடப்பட்டு விட்டது

என்னைத்தான் முதன்முதலாக
இந்த மாளிகையில் நட்டார்கள்

மற்றவர்கள் எல்லாம் பிறகு வந்தவர்கள்
அவர்கள் எல்லாம் இப்போது லாரியில் ஏறிப் போய்விட்டார்கள்

அவர்களிடம் குறைகள் ஏராளம்
குறையே இல்லாதவன் நான் மட்டுமே

நான்மட்டுமே இந்த மாளிகை வந்த நாள் முதல் இருக்கிறேன்
இனிமேலும் இருப்பேன்

நான் வானத்தையும் தாங்குவேன்
பூமியையும் தாங்குவேன்

காற்றே என்னைக் கேட்டுத்தான் இயங்கும்
அதற்கு வழி தெரியாது
என்வழிப்படி தான் அது நடக்கும்

என்னைவிட உறுதியானவன் உலகத்தில் இல்லை
என்னைவிட நிறைவானவன் யாரும் இல்லை

பேசிக் கொண்டிருந்த
உளுத்த மரத்தில்
சிறுவன் ஒருவன்
சிறுநீர் கழித்து
மானபங்கப் படுத்தினான்

அப்போதும் அது பேசியது
முன்னொரு காலத்தில் இப்படித்தான்
ஒரு சிறுவன் வந்தான்,,

muppalam2003@yahoo.co.in
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-04-17


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • காற்று வற்றிய காரணம்
  • சாலை
  • கைவினை
  • சந்திப்பு
  • வலி
  • சொந்தங்களிடமான சொந்தம்
  • நகர்வு
  • கலவரப்படும் மனது
  • விடுதலை
  • ஏற்கனவே சொல்லப்பட்டவை
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube