புது(அக)க் கவிதை
மின்னல்
பூமிப்பெண் மீது
காமுற்ற வானம் - அதன்
மேனியில் மலைகளை
‘மேகக்’ கைகளால்
மெதுவாகத் தழுவும்!
‘வானவில்’ சிரிப்பால்
வசீகரிக்கும், - பூமி
வசப்பட்டு மயங்கி
தாகத்தால் தகிக்கையில்
வேகமாய் ‘மழை’ பெய்து
தேகத்தால் கூடும் முன்..,
மோகத்தோடு நெருங்கி
முத்தமிடும் முயற்சியும்,
‘இடியாகத்’ தரைமீது
இதழ்பதிக்கும் முத்திரையும்
“மின்னல்”!!
பனசை நடராஜன், சிங்கப்பூர் -
- (feenix75@yahoo.co.in
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-02-13