உடன் பிறப்பு...
பிள்ளைப் பேறே
தொல்லை என்றெண்ணியதால்....
அரிதாகப்
பெற்றுக் கொண்டாலும்
ஒன்றோடு நின்றதால்..
அக்கா, தங்கை,
அண்ணன், தம்பி எல்லாம்
அறியாத வார்த்தைகளாகி...
அடையமுடியாத
பேராசையானது
இன்றைய குழந்தைக்கு!
- பனசை நடராஜன், சிங்கப்பூர் -
(feenix75@yahoo.co.in)
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-11-21