வலை
காலம்...
நம் வாழ்க்கை வழியெங்கும்
கணக்கிலடங்கா வலைகளை
விரித்து வைத்துக்
காத்திருக்கும்...!
கொள்ளை நோய்,
வெள்ளம், புயலென
எல்லா வலைகளும்
எதிர்பாராத இடங்களில்..!
முன்னறிந்தும், எதிர்கொண்டும்
நுண்ணறிவால் தப்பினால்..
புத்தி
தடுமாறச் செய்யும்..
இன்னொரு
தந்திரவலை வீசும்..
நமக்குள்ளே சண்டையிட்டும்,
நச்சுப் 'புகைப்' பிடித்தும்,
மது குடித்தும் மடியச் செய்யும்!
தவிர்த்தும், தாண்டியும்,
அறுத்தும், அகற்றியும்
அகப்படாமல் ஓடுகிறோம்...!
ஒவ்வொரு நாளும்..!
உயிர் வாழ்தலுக்காக..!!!
-பனசை நடராஜன், சிங்கப்பூர்.-
(feenix75@yahoo.co.in)
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-01-01